வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 7 ஏப்ரல், 2012

தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோனவர்கள் அல்லர்



மிழர்கள் எல்லோரும் பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணைபோனவர்கள் அல்லர்,முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்கள் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மனதுக்குள் அழுதார்கள் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நேற்று வெள்ளிக்கிழமை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். வடக்கில் அதிக பாதிப்புக்குள்ளான மக்கள் வாழும் பிரதேசம் முல்லைத் தீவாகும்,சுனாமி அனர்த்தம் மற்றும் யுத்த சூழல் என்பன இதற்கான காரணங்களாகும்.இன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகின்றது.அது மக்களின் வாழ்வுரிமையை மேலும் வலுப்படுத்தும் ஒன்றாகும்.தமிழ் பேசும் மக்கள நாம் என்ற பார்வை இருக்க வேண்டும் . முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 சதவீதமான பிரதேசங்கள் மின்சாரத்தைக் கண்டுள்ளன.ஏனைய பிரதேசங்கள் அதனைப் பெற்றுக் கொள்ளவுள்ளன.இவ்வருட நிறைவில் பெரும் எண்ணிக்கையிலான் கிராமங்கள் மின்சாரத்தைப் பெற்றுவிடும்.அத்தோடு மக்கள் மத்தியில் காணப்படும் இருண்ட யுகம் மாறி வெளிச்சத்தின் பாதையில் அவர்களது செயற்பாடுகள் அமையப் போகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் ஒரு முன்னுதாரணம் மிக்க மாவட்டமாகும்.சகோதர முஸ்லிம் மக்கள் மீள்குடியேற வந்த போது,அவர்களை வரவேற்று தேவைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்தனர்.அதே போல் அதிகாரிகளும் மிகவும் நேர்மைத் தன்மை கொண்டவர்கள் என்பதைக் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’