வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 7 ஏப்ரல், 2012

பாகிஸ்தானின் இராணுவத்தினர் நூற்று முப்பது பேர் பனியில் புதையுண்டனர்


பாகிஸ்தானின் சியாச்சின் மலைப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுமார் 130 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும், பனிச்சரிவில் சிக்குண்ட இராணுவத்தினரில் எத்தனைபேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றி இன்னமும் உறுதி செய்ய முடியவில்லை எனவும் மேஜர் ஜெனரல் அதார் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்கு அருகிருள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அமைந்துள்ள மேற்படி இராணுவ முகாம், உலகிலேயே அதி உயரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்த இராணுவ முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’