வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 ஏப்ரல், 2012

பழங்கள் பதனிடும் தொழிற்சாலை மூடப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை


முழுமையாக தொழிற்படாத மற்றும் குறைந்த பயன்பாட்டில் உள்ள சொத்துக்களை புனரமைத்தல் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட செவனகல சீனி தொழிற்சாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பழங்கள் பதனடும் தொழிற்சாலை மூடப்பட்டதையிட்டு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் கவலை வெளியிட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை பற்றிய நடப்பு விடயங்கள் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அக்கறையாக தன்னிடம் விசாரித்தாக செவனகல சீனி தொழிற்சாலையின் முன்னாள் தலைவர் தயா கமகே தெரிவித்தார். இந்த தொழிற்சாலை எப்போது மீண்டும் திறக்கப்படும் எனவும் தூதுவராலயம் வினவியதாக அவர் குறிப்பிட்டார். இந்த பழங்கள் பதனிடும் தொழிற்சாலை யூ.எஸ்.எயிட் நிதிப்படுத்தப்பட்டதனால் தான் அமெரிக்கா இது தொடர்பில் அக்கறை கட்டுவதாக கமகே தெரிவித்தார். இந்த தொழிற்சாலையை அரசாங்கம் பொறுப்பேற்கவில்லை என கூறிய கமகே, செவனகல தொழிற்சாலை வளாகத்தினுள் மேற்படி பழங்கள் பதனிடும் தொழிற்சாலை அமைந்துள்ளமையினால் ஊழியர்கள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படடுவதில்லை. இதனாலேயே குறித்த தொழிற்சாலை வலுக்கட்டாயமாக மூடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். "இந்நிலையில் செவனகல சீனி தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள தயா கமகேவுக்கு சொந்தமான நிலத்தை அரசாங்கம் தற்போது அளவீடு செய்கின்றது. இந்த நிலம் கமகேவிடம் மீண்டும் கையளிக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. அத்துடன் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை அரசாங்க ஆதரவாளர்கள் சிலர் கைப்பற்றியுள்ளதாக" தெரிக்கப்படுகின்றது. இருப்பினும் இப்பிரதேசத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் தனக்கு தொடர்பில்லை என அமைச்சர் ஜகத் புஷ்பகுமார மீண்டும் மீண்டும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’