வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 ஏப்ரல், 2012

மலேஷியாவில் 5 இலங்கையர்கள் கைது


ட்டவிரோதமாக மலேஷியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படும் 5 இலங்கையர் உட்பட 24 வெளிநாட்டவர்களை 20 கிராமவாசிகள் பிடித்து மலேஷியப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 10 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. இதன்போது 14 ஆப்கானிஸ்தானியர்;களும் 3 பாகிஸ்தானியர்களும் 5 இலங்கையர்களும் பிடிபட்டுள்ளனர். அடுத்த நாள் காலை 9.45 மணியளவில் இலங்கையர் ஒருவர் மரம் ஒன்றில் ஒளித்திருந்தபோது பிடிபட்டார். அதேதினம் அலைந்து திரிந்துகொண்டிருந்த வேளையில் இன்னுமொரு இலங்கையர் பிடிபட்டார். அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு வசதியாகவே இடைத்தரகர்கள் தம்மை மலேஷியாவில் இறக்கிவிட்டனர் என இவர்கள் கூறினர். கோட்டா ரின்ரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இவர்கள் மனிதக்கடத்தல் மற்றும் கள்ளக் குடியேற்றம் தொடர்பான சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுவதாக கூறினார். இவர்கள் குற்றவாளிகளாக காணப்படின் 15 வருட சிறைத்தண்டனை பெறுவதுடன், தண்டமும் செலுத்த வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’