உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேச மக்களே! ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்துடன் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைத் தினமான மேதினத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மாபெரும் எழுச்சிப் பேரணியுடனும் பொதுக்கூட்டத்துடனும் முன்னெடுக்கவுள்ளது.
வடபகுதியில் உள்ள தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்டி உணர்வுபூர்வமான முறையில் அம்மக்களின் கோரிக்கைகளையும் உரிமைகளையும் வலியுறுத்தும் எழுச்சிப் பேரணியையும் பொதுக்கூட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நடாத்தவுள்ளது. தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மட்டுமல்லாது அரசியலுரிமைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் வெகுஜன அமைப்புக்களும் இந்தப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளனர். யாழ் நகரில் நடைபெற இருக்கும் இம் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் எழுப்ப அணி திரளுமாறு நாம் அறை கூவல் விடுக்கின்றோம்! தொழிலாளர்கள் விவசாயிகள் தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புக்கள் மாதர் சங்கங்கள் மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் இந்த மாபெரும் பேரணியில் கலந்து கொண்டு உழைப்பவர் தினமான மேதினத்தில் உரிமைக்குரல் எழுப்ப ஒன்றுபடுவோம். இந்த பேரணியில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் தொழிலாளர் வர்க்கத்தினதும் உழைக்கும் மக்களினதும் உரிமைகளை வலியுறுத்தும் ஊர்திகளும் இடம்பெறவுள்ளது. பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பற்றிய ஏனைய விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’