வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 மார்ச், 2012

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியாவே யோசனை வழங்கியது


லங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணையை கொண்டு வருவதற்கான யோசனையை அமெரிக்காவிற்கு இந்தியாவே வழங்கியது என்று இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
தமிழ் நாட்டின் எதிர்ப்பலைகளால் இந்தியா இலங்கையை ஆதரிக்கும் போக்கில் தளர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கைக்கு எதிரான பிரேரணை அமெரிக்காவின் தேவைக்காகக் கொண்டு வரப்பட்டதொன்றல்ல. இந்தியாவின் வழிகாட்டலுக்கமையவே இப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றதேயொழிய தமிழ் மக்களுக்கு பெரிதாக எதுவும் வழங்கப்படவில்லை. அதேவேளை இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் கோட்பாட்டையே இந்தியா கடைப்பிடிக்கவிருந்தது. ஆனால் தமிழ் நாட்டின் கடுமையான அரசியல் அழுத்தங்களால் மன்மோகன்சிங் அரசாங்கம் தடுமாறிப் போய் இப் பிரேரணைக்கு சில திருத்தங்களுடன் ஆதரவு வழங்கத் தயாரென தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்நிலைப்பாட்டை வரவேற்கின்றோம். இன்று ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான கடும் போக்கு அதிகரித்துள்ளது. எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கட்டாயம் அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகும். தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் அரசாங்கத்திலுள்ள சம்பிக்கவாலோ, விமல்வீரசன்சவாலோ தமிழ் மக்கள் மீது கை வைக்க முடியாது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அத்தோடு இவர்களது அடிப்படைவாதத்திற்கு தென்பகுதி சிங்களவர்கள் ஒத்துழைப்பை வழங்கமாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சிங்கள மக்கள் பாரிய நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். தாம் மேற்கொள்ளும் போராட்டங்களில் சிங்கள மக்களின் பங்களிப்பு இதனை பறை சாற்றியது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’