வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 6 மார்ச், 2012

மாணவி இயேசுதாசன் லக்சினி அவர்களது கொலை தொடர்பாக நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் கண்டன அறிக்கை


நெடுந்தீவு மத்தி மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07ம் வட்டாரத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி இயேசுதாசன் லக்சினி வயது 12 இவர் கடந்த 2012.03.03 ஆந் திகதி முற்பகல் வேளையில் நெடுந்தீவு மத்தி கிராம அலுவலர் பிரிவில் (ஜேஃ04) பெருக்கடி வீதியில் பெருக்கடி விநாயகர் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு இல்லாத காணியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அன்னாரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் இதுதொடர்பாக எமது நெடுந்தீவுப் பிரதேசத்திலே தீவக மக்களின் துன்ப துயரங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் குடும்ப பிணைப்புடன் கலந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது நெடுந்தீவு பிரதேச சபையானது மக்களோடு இணைந்து ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது. இந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியான கொடுரப்படுகொலைகள் போர் ஓய்ந்து சுபீட்சப் பயணம் மேற்கொண்டு இருக்கும் எமது மக்களுக்கு மீண்டு;ம் ஒரு பயப்பீதியுடனான வாழ்வைத் தோற்றுவித்துள்ளது. இப்படிபட்ட கொலையாளிகள் எமது சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள் இவர்களைப் போன்றவர்களை யாரும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்டவர்கள் கட்டாயம் நீதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள். என்பதோடு இவர்கள்களைப் போல் எமது தீவகத்தில் யாரும் இருக்கவும் கூடாது உருவாகவும் கூடாது என்பதையும் இடித்துரைப்பதோடு இழப்புக்கள் ஈடுசெய்யமுடியாத அளவிற்கு துயரத்துடனும் துன்பத்துடனும் வாடி நிற்கும் அன்னாரது குடுபத்தாருக்கு எமது ஆறுதல்களையும் அனுதாபங்களையும் கூறிக்கொள்கின்றேன். இதேவேளை இக்கொலைச் சம்பவத்திற்கு காரணமானவரை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறுவதைத் தவிர்ப்பதற்கு மாறாக இச்சம்பவத்தை வெறும் அரசியலாக்கி செயற்படும் சுயநல எண்ணங்களை கைவிட்டுச் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட சகலருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். தானியெல் றெக்சியன் தவிசாளர் நெடுந்தீவு பிரதேச சபை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’