நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இழக்கும் நிலைமை உருவாகுமென எச்சரிக்கை விடுக்கும் இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துவது எவ்வாறு ஏகாதிபத்தியவாதமாகுமென்றும் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோமென ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் அரச பிரதிநிதியான தமரா குணநாயகமும் உறுதி வழங்கியுள்ளதோடு பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே அரசாங்கத்தின் கட்சிகளான பேரினவாதத் கொள்கைகளைக் கொண்ட ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச ஆகியோரது பேச்சைக் கேட்டு ஜெனிவாவில் வழங்கிய உறுதி மொழிகளை காற்றில் பறக்க விடப் போகிறதா?அல்லது நிறைவேற்றப் போகிறதா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இந்த நிலை தொடரும் போது அரசாங்கத்தில் பிளவு ஏற்படும் ஆபத்தும் தோன்றியுள்ளது. ஜெனிவாவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற அமெரிக்காவின் பிரேரணை ஏகாதிபத்தியவாத சதியென விமர்சிக்கப்படுகிறது. அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று ரூபாவின் பெறுமதியைக் குறைத்தமையை என்னவென்று சொல்வது. தமிழருக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துவது ஏகாதிபத்தியவாதம். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தைப் பின்னடையச் செய்வது நல்லதென்றே இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’