ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் இலங்கையின் சுயாதிபத்தியத்துக்கு எதுவித பங்கமும் இல்லை. பிரேரணையிலுள்ள பாதகமான கருத்துக்களை நீக்கும் வகையில் இந்தியா திருத்தம் கொண்டு வந்தது பாராட்டத்தக்கதாகும் என்று தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்ததெனக் கூறப்படும் பிரேரணை நிறைவேறியது குறித்து அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது, ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை படிப்படியாக அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதன் பின்னரும் தொடர்ந்தும் எஞ்சிய சிபாரிசுகளை மேற்கொள்ள வேண்டும். ஜெனீவாவில் அமெரிக்கா முன் வைத்த பிரேரணையிலிருந்து இலங்கைக்கு பாதகமான சரத்துக்களை இந்தியா திருத்தங்களை முன் வைத்து நீக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டது. இதனால் இலங்கைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சொன்னார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’