வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 மார்ச், 2012

ஈரானுக்கு எதிரான கடைசி தெரிவு இராணுவத் தாக்குதல்: ஒபாமா


பொருளாதார தடைகள் மூலம் ஈரானின் அணுசக்தி இலட்சியங்களை நிறுத்த முடியாவிட்டால் இறுதித் தெரிவாக, ஈரானிய அணுசக்தித்திட்டங்களை அழிப்பதற்கு அமெரிக்க இராணுவத்துக்கு தான் உத்தரவிடுவார் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அனைத்து தெரிவுகளும் மேசையில் உள்ளன. இறுதித் தீர்வானது இராணுவு அம்சமாகும் என அவர் கூறினார். அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் காலோசிதமற்ற தாக்குதல் நடத்துவதற்கு எதிராகவும் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறன நடவடிக்கையானது ஈரான் தன்னை பாதிக்கப்பட்டவராக சித்தரிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என அவர் கூறியுள்ளார். இவ்வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் த அத்லாண்டிக் சஞ்சிகைக்கு அளித்த செவ்வியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார். "திட்டவட்டமான எமது நோக்கங்கள் என்ன என்பதை, கொள்கை அடிப்படையில், நான் விளம்பரப்படுத்திக் கொள்ளப்போவதில்லை. எனினும் ஈரான் அணுவாயுதங்களை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா கூறும்போது நாம் அதை அர்த்தபூர்வமாக கூறுகிறோம் என்பதை ஈரான் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் புரிந்துகொள்ளும் என எண்ணுகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார். ஈரானுடனான விவகாரத்தில் 'ஒரு இராணுவ அம்சம்' என்பது தடைகள், ராஜதந்திரம், கடந்தகாலத்தில் நுட்பமாக உணர்த்தப்பட்ட தாக்குதல் அச்சுறுத்தல் முதலானவை கலந்த பல தெரிவுகளில் ஒன்று என்பதை ஈரானும் இஸ்ரேலும் உணர்ந்துள்ளன என அவர் கூறினார். "ஈரான் மற்றும் அதன் ஒரேயொரு உண்மையான நட்பு நாடும் (சிரியா) பின்னடைந்துள்ள நிலையில் திடீரென ஈரான் தான் பாதிக்கப்பட்டவராக காட்டிக்கொள்ளக்கூடிய கவனச் சிதறலை நாம் ஏன் விரும்ப வேண்டும்?" எனவும் ஒபாமா கேள்வி எழுப்பினார். "உலகில் மிக கொந்தளிப்பான ஒரு பிராந்தியம் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். அப்பிராந்தியத்திலுள்ள 'பல நாடுகளுக்கு தான் அணுவாயும் வைத்திருக்காதபோது ஈரான் அணுவாயுதங்களை வைத்துக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாதனவாக உள்ளன. ஈரானானது பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுசரணை வழங்குவதற்காக அறியப்பட்டதாகும். எனவே (அனுவாயுத) பரவல் அச்சுறுத்தலானது தீவிரமாகி வருகிறது' என ஒபாமா மேற்படி செவ்வியில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’