ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் பதுளை மற்றும் பாணந்துறை ஆகிய இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற ஒழுங்கீனங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிறுக்கிழமை ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஹாலிஎல பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட ஒழுங்கீனங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ரணில் விக்ரமசிங்க கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது, அமைத்தியீனமான முறையில் நடந்தாக ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். இதன் போது அவர்கள் மதுபோதையில் காணப்பட்டனர். அதனால் அவர்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒழுக்கமற்றவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் இடமில்லை என தான் ஏற்கனவே எச்சரித்துள்ளதாக ரணில் விக்ரமசிங் குறிப்பிட்டார். 'ஐக்கிய தேசிய கட்சி இல்லாமல் தங்களால் மாத்திரம் அரசாங்கத்தினை வீழத்த முடியும் என எவராவது நினைத்தால் தவறாகும். அத்துடன் ஏனைய கட்சி உறுப்பினர்கள் போன்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மது அருந்த கூடாது' என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். இதேவேளை, பாணந்துறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சட்டத்தரணி ஜோய் ராஜகருண நியமிக்கப்பட்டுள்ளார். பாணந்துறையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசுரிய ஆகியோருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்காமையினால் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் குழப்பம் ஏற்;படுத்தினர். பாணந்துறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் கூட்டு எதிரணியினால் ஏற்பாடு செய்யப்பட்டமையினால் கட்சி தவைர்கள் அனைவருக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்க வேண்டியிருந்தது. இதனாலேயே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய ஆகியோர் உரையாற்ற சந்தர்;ப்பம் வழங்கப்படவில்லை என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’