வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 மார்ச், 2012

மேர்வினுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீ.ல.சு.க. தீர்மானம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும்போது எவராலும் தன்னை ஒன்றும் செய்யமுடியாதென அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக நேற்று தீர்;மானித்துள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்துத் தொடர்பில் அவரிடமிருந்து விளக்கம் கோருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அலரிமாளிகையில் நேற்றிரவு ஒன்றுகூடிய மத்திய குழு, அமைச்சர் மேர்வின் சில்லாவின் விவகாரம் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடினர். அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்தால் கட்சி பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கூறியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. சிகிரியாவுக்கு சுனாமி வந்தாலும் கூட, 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை எனக்கு எதிரான எந்த சுனாமியும் விலகிச் செல்லுமென நான் உறுதிபடக் கூறுகின்றேன்' என ஆர்ப்பாட்டமொன்றில் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’