வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 மார்ச், 2012

முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் கொண்டதாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் கொண்டதாக திட்டங்கள் வகுக்கப்படுவதுடன் அவற்றை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (28) இடம்பெற்ற பனை அபிவிருத்தி சபை மற்றும் வடகடல் நிறுவனங்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சின் கீழான ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயற்படும் அதேவேளை முறையான திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் அவற்றை மேம்படுத்தும் வகையில் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இவ்வாறான ஒன்றிணைந்த உழைப்பின் மூலமே ஒவ்வொரு தொழிற்துறைசார் நிறுவனங்களும் பயனாளிகளும் பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். முன்பதாக பனை அபிவிருத்தி சபையூடாக வவுனியா புளியங்குளத்தில் உள்ள பனம் பண்ணையில் பயன்தரு மரங்களை ஊடு பயிர்ச்செய்கையின் கீழ் செய்கை பண்ணுவது தொடர்பில் தாம் ஆராய்தறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஒன்று முதல் 5 வருடத்திற்குட்பட்ட இளம் பனம்கன்றுகளை இன்னோர் இடத்திலிருந்து இயந்திரசாதனத்தின் உதவியுடன் பிடுங்கி பண்ணைகளில் நடுகை செய்வது தொடர்பில் பரீட்சார்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் நாடளாவியரீதியில் பனை அபிவிருத்தி சபையூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு செயற்றிட்டங்கள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் பனைசார் உற்பத்திகளின் நவீன தொழில்நுட்பம் சந்தைவாய்ப்பு தொழிற்துறைசார்ந்த பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் கற்பக விற்பனை நிலையங்கள் கவனம் செலுத்த வேண்டியதுடன் பனை மரங்களை தறிப்பது உள்ளிட்ட விடயங்களிலும் விசேட கவனம் செலுத்தினார். இதனிடையே அமைச்சின் கீழான வடகடல் நிறுவனத்தின் செயற்றிட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் அந்நிறுவனத்தினது மேம்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தினார். இவ்வருடத்தின் முதலிரண்டு மாதங்களிலும் குறிப்பிட்ட நிறுவனங்களினது முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களில் கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு நடவடிக்கைகளின் போதும் நிறுவனங்களினதும் துறைசார்ந்த பயனாளிகளினதும் நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் இதன்போது சுட்டிக்காட்டினார். இன்றைய கலந்துரையாடலின் போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சின் ஆலோசகர் திருமதி ஜெகராசிங்கம் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் வடகடல் நிறுவனத் தலைவர் பரந்தாமன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும











் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’