பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், நியமிப்பதில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை பிழையான செயலாகும் என்று தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையுமென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 22 பேர் அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்த்தப்பட்டனர். இவர்களில் சிங்களவர்கள் 21 பேரும் ஒருவர் முஸ்லிமும் ஆவார். ஒரு தமிழரேனும் பதவியுயர்த்தப்படவில்லை. இது குறித்து கேட்டபோதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இது முற்று முழுக்க பிழையான செயற்பாடாகும். இப்பதவிக்கு தகுதியுள்ள தமிழ் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். அப்படியிருந்தும் அவர்கள் இணைத்துக் கொள்ளாமை அநீதியான செயலாகும். அத்தோடு இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி பாதிக்கப்படும். மேலும் மேலும் இனங்களுக்கிடையேயான இடைவெளிகள் அதிகரித்தே செல்லும். எனவே இது தொடர்பில் உடனடியாக அரசாங்கத்திற்கு கடிதம் எழுதவுள்ளேன். இந்தியா ஜெனீவாவில் எமக்கு எதிரான பிரேரணையை இந்தியா எதிர்க்கும். இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடருமென்றும் உறுதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் மௌனம் தொடர்பாக அச்சமடைய அவசியமில்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’