2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார்.
சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார். எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’