வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 மார்ச், 2012

இலங்கை விவகாரத்தால் சர்வதேச நாடுகள் இரு அணிகளாகப் பிளவு


க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை வாக்கெடுப்பின் போது தோற்கடிப்பதற்கான கடின முயற்சியிலும் உழைப்பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்று ஜெனீவாவில் தங்கியுள்ள இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் இரண்டு அணிகளில் பிரிந்து நிற்கின்றன. இது மனித உரிமைப் பேரவைக்கு ஆரோக்கியமான விடயமல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தூதுக்குழுவின் இராஜதந்திர நகர்வுகள் எந்த மட்டத்தில் அமைந்துள்ளன என்று வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’