கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும்; அப்பகுதி மக்களிடையே இதுகுறித்து தற்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் அறிந்து, மாநில அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் பேராசிரியர் எஸ்.இனியன் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு தங்கள் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சர்ச்சைக்குரிய கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கூடங்குளம் திட்டத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் தொடர வேண்டுமா இல்லையா என்பதையும் தமிழக வல்லுனர் குழுவின் அறிக்கை தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும்போது தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’