அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை 51 ஓட்டங்களால் இலங்கை அணி தோற்கடித்தது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றது. லாஹிரு திரிமான்ன 62 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். திலகரட்ன தில்ஷான் 51 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்திவ்ஸ் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 45 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 ஓடடங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இர்பான் பதான் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 238 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 290 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி ஓர் ஓட்டத்தையும் பெறுவதற்கு முன்னரே அணித்தலைவர் வீரேந்தர் ஷேவாக்கை இழந்தது. சச்சின் டெண்டுல்கர் கௌதம் காம்பீர் ஆகியோர் வேகமா ஓட்டங்களைக் குவிக்க முற்பட்டபோதிலும் முறையே 22, 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அதன்பின் வீரட் கோலி 66 ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா 32 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய இவர்களின் துடுப்பாட்டத்தின் மூலம் இந்திய அணி 30 ஆவது ஓவரில் 3 விக்கெட்இழப்பிற்கு 146 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு வலுவான நிலையில் இருந்தது. எனினும் அதேஓவரில் இவர்களின் இணைப்பாட்டத்தை பர்வீஸ் மஹ்ரூப் தகர்த்தார். ரவீந்திர ஜடேஜா 17 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். 7 ஆவது வரிசை வீரர் இர்பான் பதான் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 34 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்துகொண்டிருந்தன. 10 ஆவது விக்கெட்டாக பதான் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 238 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இலங்கை பந்துவீச்சாளர்களில் திசேர பெரேரா 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் நுவன் குலசேகர 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினனர். லஷித் மாலிங்க 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகiயும் பர்வீஸ் மஹ்ரூப் 52 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். டெண்டுல்கர், காம்பீர், ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திதுடன் ஷேவாக், கோலி ஆகியோரின் பிடிகளையும் கைப்பற்றிய நுவன் குலசேகர இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். இத்தொடரில் இறுதியாக இலங்கை- இந்திய அணிகள் மோதிய போட்டி சமநிலையில் முடிவுற்றது. அதன்பின் அவுஸ்திரேலிய அணியை இலங்கை வென்றது. இப்போது தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’