வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் ஒரு வரலாற்று சேவையினை செய்து வருகின்றார்கள் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பாராட்டு


ன்னியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இன்று ஒரு வரலாற்று சேவையினை செய்து வருகின்றார்கள். மக்களுக்கு இருக்கும் ஆபத்தை நீக்க மிகவும் கடினமான பணியினை மேற்கொண்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் இந்த வரலாற்று சேவை என்றும் பாராட்டுதலுக்குரியது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (19) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஜெயபுரம் கிராமத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களுக்கு சவாலாக விளங்கும் கண்ணிவெடிகளை புதைப்பது இலகுவானது. ஆனால் அதனை அகற்றுவது என்பது மிகவும் கடினமானது. வன்னியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இந்தப் பணியினை இன்று பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் பணி மகத்தானது கிளிநொச்சியில் இன்று 95 வீதமான மீள்குடியேற்றத்திற்கு கண்ணிவெடி அகற்றும் இந்த உன்னதமான பணியே காரணம். ஆரம்பத்தில் மீள்குடியேறும் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பின்னர் தற்போது விவசாய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அவை நிறைவு பெற்று விவசாய நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் அந்த வகையில் இன்று ஜெயபுரம் பிரதேசத்தில் இத்தாவில் பண்ணை அடங்கலாக கே-363பி கே-438ஏ பிரிவுகளில் 83277 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்களின் நடவடிக்கைக்கு கையளிக்கப்படுகிறது. அத்தோடு எம்மால் இந்த பிரதேச மக்களின் பயனுக்காக 17 இலட்சம் ரூபா பெறுமதியான நீர்பாசன இயந்திர தொகுதி ஒன்றும் மக்களிடம் கையளிக்கப்படுகிறது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கண்ணிவெடி அகற்றும் பணி இன்று ஒரு வரலாற்று தேவை மட்டுமன்றி வரலாற்று சேவையாகவும் உள்ளது. அந்த வகையில் மக்கள் சார்பாக எனது பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் கிளிநொச்சி மாவட்ட தொழிநுட்ப ஆலோசகர் பொன்சேகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பூநகரி பிரதச செயலர் வசந்தகுமார் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் செயற்திட்ட முகாமையாளர் அன்றூ ஆச்சர் பேராசிரியர் சில்வா மற்றும் பொலிஸ் அதிகாரி கிராம அலுவலர் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’