வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 பிப்ரவரி, 2012

அரசாங்கம் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யுமென தோன்றவில்லை: ரணில்


வே கமாக அதிகரித்து செல்லும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்கள் படும்பாட்டை பார்க்கும்போது இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் போலத் தெரியவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை செயற்படுத்துவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியது. ஆனால் மக்களின் துன்பத்தை கருதும்போது இந்த அரசாங்கம் தொடர்ந்து பதவியிலிருக்க கட்சி ஆதரவு வழங்காது என ரணில் விக்கிரமசிங்க கூறினார். வரிகள், விலை அதிகரிப்பு, மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை கொல்லும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது கடினம் என அவர் கூறினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் அமுலாக்க எதிர்கட்சிகள் தமது ஆதரவை வழங்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்களாக சகல கட்சிகளும் மக்களும் ஏற்கும் வகையில் இதை செய்ய வேண்டுமெனவும் ரணில் கூறினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறைப்பாடுகள் உள்ள போதிலும், இந்த ஆவணத்தை ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாக கொள்ள முடியும் என ரணில் கூறினார். அரசாங்கம் இந்த அறிக்கைப் பற்றி எதிர்க் கட்சிகளுடன் பேச வேண்டும். இதனடிப்படையில், தேசிய பிரச்சினைக்கு முடிவுக்கட்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதன்பின் ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். இதன்பின்பு அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். என அவர் கூறினார். காணிப்பிரச்சினையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் ஏற்கத்தக்கன அல்ல என அவர் கூறினார். நோர்வே தலையிட்ட பின்பே யுத்தம் மோசமடைந்தது என நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறியிருப்பதை அவர் நிராகரித்தார். இதேவேளை யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி சரியான முறையில் கவனிக்கவில்லை என ரணில் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’