வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 பிப்ரவரி, 2012

காத்தான்குடியில் தாக்கப்பட்ட மாணவிகள் எந்தவித குற்றமும் புரியவில்லை: பள்ளிவாசல்களில் அறிவிப்பு


கா த்தான்குடியில் கடந்த ஜுலை மாதம் 20ஆம் திகதி தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட இரண்டு மாணவிகளும் எந்தவித குற்றமும் செய்யவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 26ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலினை அடுத்தே காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் காத்தான்குடி மெத்தை பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். "குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களும் எந்தவிதமான குற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என இக்கலந்துரையாடலின் போது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காகவும் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்காகவும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மனம் வருந்துகின்றது. எனவே குறித்த இரு மாணவிகளிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விநயமாக வேண்டுகிறது" என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலினை அடுத்து காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இணக்கம் காணப்பட்டவாறு, குறித்த இரு மாணவிகளுக்கும் உதவி தொகையொன்றினை வழங்குவது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கலந்துரையாடி இரு கிழமைக்குள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் இருவரும் எவ்வித குற்றமும் புரியவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நீதவானின் உத்தரவிற்கிணங்க காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் கடந்த ஜுன் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’