வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 பிப்ரவரி, 2012

மீன்களுக்கு கடல் எல்லை இல்லை; ஏழை மீனவர்களை இறைமை கட்டுப்படுத்தாது: தமிழக அரசு


லங்கையின் நீர்ப்பரப்பினுள் இந்திய கடல் தொழிலாளர்கள் எல்லை மீறிச் செல்வது உண்மையே என தமிழ்நாட்டு அரசாங்கம் நேற்று புதன்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளது.
இருப்பினும் ஏழை கடல்த் தொழிலாளர்களுக்கு போக்கிடம் வேறு இல்லை எனவும் அவர்கள் தமது ஜீவனோபாயத்தை எப்படியும் கொண்டு செல்ல வேண்டி உள்ளது எனவும் நியாயம் கற்பித்து அது அத்துமீறலை நியாயப்படுத்தியுள்ளது. சர்வதேச கடல் எல்லைக்கோடு போன்ற செயற்கையான கட்டுப்பாடுகளை திணிப்பதன் மூலம் அவர்களின் பாரம்பரிய மீன்பிடிக் களங்களை மறுக்க முடியாது என தமிழ்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மீன்களுக்கு கடல் எல்லை இல்லை. அதுபோலவே சட்டங்கள் அல்லது நாடுகளின் இறைமை என்பன ஏழைஇ அப்பாவி மீனவர்களை கட்டுப்படுத்தாது. பாக்கு நீரிணையில் இவர்களின் பாரம்பரிய நடைமுறைகளை தடுக்கும் எந்த ஏற்பாடும் ஆயிரக்கணக்கான மீனவர்களினதும் அவர்களின் குடும்பத்தினரதும் வாழ்வாதாரத்துக்கான உரிமையை மறுப்பதாகும் என அரசாங்கம் கூறியுள்ளது. கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததே இந்த பிரச்சினைக்கு மூலகாரணமாயிற்று எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. இவ்வழக்கு விசாரணை பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’