பஸ் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள சுமையை குறைக்கும் வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு போக்குவரத்துப் படி வழங்க வேண்டும் என தொழில் அமைச்சர் காமினி லொக்குகே விடுத்த வேண்டுகோளை அமைச்சரவை நேற்று நிராகரித்துவிட்டது என தகவல்கள் தெரிவித்துள்ளன.
தனியார் பஸ் நிறுவனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதைவிட அரசாங்க ஊழியர்களுக்கு போக்குவரத்துப் படி வழங்குவது மேலானது அமைச்சர் லொக்குகே நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடந்த கூட்டத்தில் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன. ஒவ்வொரு துறைக்கும் சலுகைகள் வழங்கப்படுமாயின் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் நோக்கம் தவறிவிடும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் விளக்கேற்ற மண்ணெண்ணைய் பயன்படுத்தும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக 200 ரூபா வழங்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார். எரிபொருள் விலை, மின்சாரத்துக்கான மேலதிக கட்டணம் என்பவற்றை ஒரே தரத்தில் அதிகரிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள இரண்டு சீனக் கம்பனிகளின் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் லொக்குகே வலியுறுத்திப் பேசினார். அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமை தாங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’