வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 பிப்ரவரி, 2012

அழுத்தங்களை கொடுக்கும் வெளிநாடுகள் உள்நோக்கத்துடனேயே செயற்படுகின்றன: ஜனாதிபதி _


ர்வதேச நாடுகளின் மத்தியஸ்தம் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொடுக்காது. பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி நாட்டிற்கு பல்வேறு வகையில் அழுத்தங்களை கொடுக்கும் வெளிநாடுகள் உள்நோக்கத்துடனேயே செயற்படுகின்றனவே தவிர இலங்கை மீது பற்று எதுவும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இனவாதத்தை தூண்டிவிட்டு புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இதனால் தான் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு முயற்சிக்கையில் வன்னி தமிழர்கள் அரசை பாதுகாக்க வீதியில் இறங்கி போராடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். ""ராவய'' பத்திரிகையின் 25 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்தினால் நாடு பல்வேறு வகையிலும் பின்னடைவுகளையே சந்தித்தது. இனவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் காணப்படும் சமூகத்தினால் அபிவிருத்திகளை ஒரு போதும் அடைய முடியாது. பயங்கரவாதத்தை ஒழித்தது மட்டுமல்ல எதிர்காலத்தில் நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் ஒன்று மீண்டும் ஏற்படாத வண்ணம் செயற்பட வேண்டியது அவசியமாகும். புலிகளுக்கு எதிரான போரை நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசை முன்னெடுக்கவில்லை. பொது மக்களின் முழுமையான ஆதரவும் இராணுவ வீரர்களின் பங்களிப்புமே உள்நாட்டு யுத்தத்தை வெற்றியடைய செய்தது. இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவையில் தீர்மானங்களுக்கு முயற்சிக்கையில் நாட்டில் அனைத்து இன மக்களும் கட்சி பேதங்களை மறந்து அரசாங்கத்தை பாதுகாக்க போராடுகின்றனர். வடக்கு கிழக்கு மக்களும் ஈடுபாட்டுடன் வீதியில் போராட்டம் நடத்தினர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தலைவரினால் மாத்திரம் அனைத்தையும் அடைந்து விட முடியாது. சகல தரப்புகளினதும் பங்களிப்புகள் அரச தலைமைத்துவத்திற்கு அத்தியாவசியமானதாகும். விமர்சனங்களை மாத்திரம் செய்து விட்டு சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்தை கோருவது பயனற்ற விடயமாகும். இதனால் ஒரு போதும் உள்நாட்டு பிரச்சினைகள் தீராது. மாறாக வெளிநாடுகளின் உள்நோக்கங்களே நாட்டில் இடம்பெறும். தற்போது நாட்டில் பல நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுகின்றனர். எனவே நாட்டில் தேவையற்ற போராட்டங்களை முன்னெடுப்பது தேவையற்ற பிரச்சினைகளையே தோற்றுவிக்கும். தெரிவுக் குழு ஊடாக இனப்பிரச்சினைக்கும் ஒற்றுமையாக ஏனைய பொது பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முன்வர வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதால் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வகையிலும் தீமைகள் ஏற்படப் போவதில்லை. இலங்கையின் ”தந்திரம், இறையாண்மையை பாதுகாக்க அனைத்து தரப்புகளும் அரசுடன் கை கோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என்றார். __

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’