வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 பிப்ரவரி, 2012

இராஜதந்திர போராட்டம் ஆரம்பம்: பீரிஸ் _


க்கிய நாடுகள் சபையின் மனித பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்காக அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் பாரிய இராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுடன் நடத்திய காலை உணவு சந்திப்பின்போதே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரவுள்ள பிரேரணையானது பாரதூரமானதல்ல என்றும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலையடைய வேண்டியதில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டுக்கு இலங்கை ஆதரவு வழங்காது என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரமானது இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதாக அமையும். எனவே அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’