ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் எழுப்பப்பட்ட பதிலளிக்கும் கடப்பாடு விவகாரங்களை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆராயப்படவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் நிலையில், நவநீதம்பிள்ளையை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் நேற்று சந்தித்து பேசினர். எனினும் நவநீதம்பிள்ளையின் கூற்றுக்கு இலங்கைத் தூதுக்குழுவினர் உடனடியாக உடனடியாக பதிலளித்ததாக இசந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 'நாம் அவரை உடனடியாக திருத்தினோம். பதிலளிக்கும் கடப்பாடு விவகாரங்களை நாம் ஆராய்ந்துளோம்' எனக் கூறிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எந்தவொரு நல்லிணக்க செயன்முறையையும் வெளிச்சக்திகள் அல்லாமல் இலங்கை மக்களே அங்கீகரிக்க வேண்டும் என கலந்துரையாடலில் தெளிவுபடுத்தியதாகவும் கூறினார். 'ஒசாமா பின் லாடன் எப்படி கொல்லப்பட்டார் என்பதை இலங்கை மக்கள் பார்த்தார்கள் என்பதைதையும் நாம் வெளிப்படையாக அவரிடம் கூறினோம். எனினும் பின் லாடன் கொலை தொடர்பாக எவரும் மனித உரிமை பிரச்சினைகளை எழுப்பவில்லை' எனவும் அவர் தெரிவித்தார். அவ்விடயம் குறித்து, தான் அறிக்கையொன்றை விடுத்ததாக, நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். அத்துடன் இக்கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் குறித்து தான் கூறுவதற்கு எதுவுமில்லை எனவும் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். இதேவேளை தருஸ்மன் அறிக்கையின் நம்பகத் தன்மை குறித்து தான் கேள்வி எழுப்பியதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். அநாமதேய மூலங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்தகை குழுவினர் கண்டறிந்தவற்றை முன்னாள் நீதிபதியான திருமதி பிள்ளை எவ்வாறு நம்புவார் என தான் அவரிடம் கேள்வி எழுப்பியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 'அக்குழுவினர் விசாரணைகளை நடத்த அனுமதிக்கப்படவில்லை. விசாரணை நடத்தப்படாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என நான் கேள்வி எழுப்பினேன்' எனவும் அவர் கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’