வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 பிப்ரவரி, 2012

அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஜெனீவாவில் இலங்கைத் தூதுக்குழு தீவிர பிரசாரம்


.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைத் தூதுக்குழுவினர், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் வெற்றிகரமாக பல உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளதாக அத் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்விடயத்தில் தீர்வுக்காக ஏற்கெனவே இலங்கையிலுள்ள நேர்த்தியான செயன்முறைக்கு சர்வதேச தலையீடானது இடையூறாக அமைந்துவிடும் என இந்நாடுகள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறினார். அதேவேளை, இத்தகைய தீர்மானம் தமது சொந்தப் பிரச்சினைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அந்நாடுகள் கருதுவதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். அதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒவ்வொரு நாட்டினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான மீளாய்வு (யூ.பி.ஆர்.) ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஏன் அவசரப்பட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். யூ.பி.ஆர். ஒவ்வொரு நாட்டுக்கும் செல்லுபடியானதாகும். அமெரிக்காவையும் அது உட்படுத்துகிறது. இலங்கைக்கான தவணை எதிர்வரும் ஒக்டோபர் மாதமாகும். இந்நிலையில் இப்போது ஏன் இந்த அவசரம்?' என அவர் கேள்வி எழுப்பினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’