அ வுஸ்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் பாங்க் (சி.பீ.) கிண்ணத்திற்கன முக்கோண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 4 விக்கெட்டுளால் வென்றது.
பேர்த் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. வீரட் கோலி 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார். சச்சின் டெண்டுல்கர் 44 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 24 ஓட்டங்களையும் பெற்றனர். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கைப் பந்துவீச்சாளர்களில் ஏஞ்சலோ மத்திவ்ஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திசேர பெரேரா 37 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் தம்மிக்க பிரசாத் 47 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் லஷித் மாலிங்க 49 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இத்தொடரில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய இந்தியா முதல்வெற்றியைப் பெற்றுள்ளது. இலங்கை அணி இத்தொடரில் விளையாடிய முதலாவது போட்டி இதுவாகும். இத்தொடரின் ஆரம்பச் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய இரு அணிகளை தலா 4 தடவை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’