வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஜனவரி, 2012

சிறிய நாடுகளை அமெரிக்கா தண்டிக்கிறது : ஜனாபதி மஹிந்த


ரானுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ள தடைகளின் தாக்கங்கள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளதால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன.
இலங்கையிலுள்ள ஒரேயொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரானிய மசகு எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்பதால் இலங்கையானது எண்ணெய்க்கு ஏறத்தாழ ஈரானிலேயே தங்கியுள்ளது. 'எமக்கு ஒரு மாற்று வழி தேவை. இறுதியில் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் ஈரானையன்றி எம்மை சிறிய நாடுகளையே பாதிக்கின்றன' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கி ஈரானுக்கு டொலரில் கொடுப்பணவுகளை செய்யக்கூடாது என அமெரிக்க தூதுவரலாயம் எச்சரித்துள்ளதாவென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கேட்கப்பட்டபோது அவர் பொதுவாக 'தடைகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார். ஐ.நா.வின் தடைகளை இந்தியா மதிக்கும், அமெரிக்காவில் தடையை இந்தியா ஏற்று நடக்காது என்ற இந்தியாவின் நிலைப்பாடு போன்றவற்றை இலங்கை பின்பற்றுமா என ஜனாதிபதியிடம் கேட்டபோது இது ஆராயப்பட வேண்டிய விடயம் என கூறினார். (த.ஹிந்து)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’