வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பகடிவதையில் ஈடுபடும் ஆசிரிய பயிலுநர்களை வெளியேற்ற தீர்மானம்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் புதிய மாணவர்களை பகடிவதைக்கு உட்படுத்தும் ஆசிரிய பயிலுநர்களை வெளியேற்றுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் போலன்றி, இவர்களுக்கு தொழில் உத்தரவாதம் உள்ளது. பயிற்சியின் பின், இவர்கள் நிரந்தர ஆசிரியர்களாக உள்வாங்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
"இவர்கள் மாணவர்களை சரியாக வழிப்படுத்த வேண்டியவர்கள். தமது கனிஷ்;ட தொகுதி மாணவர்களை குரூரமாக நடத்தும் இவர்களால் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?" என அவர் கேள்வி எழுப்பினார். முன்பு பகடிவதையில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டனர். இந்த முறை இவர்களை கல்லூரியிலிருந்து விலக்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம் என அமைச்சர் கூறினார். "அண்மை காலமாக தேசிய கல்வியற் கல்லூரிகளில் குரூரமான பகடிவதைகள் பல இடம்பெற்று வருவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் புதிய மாணவர்கள் கழிவுகளை சாப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவற்றை நாம் சகித்துக்கொள்ள முடியாது. இத்தகையவர்களை வீட்டு அனுப்பி விட வேண்டும். இதன் மூலம் அடுத்த தொகுதி மாணவர்களை கல்வியியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்க முடியும்" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’