முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்குகளை அவதானித்து வந்த, அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் (ஐ.பி.யு) பிரதிநிதியான மார்க் றொவெல்,'சட்டமா அதிபர் பல தடவை பேசிய போதும் தான் கேட்ட விடயங்களை தனக்கு தரவில்லை' என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் பிரதியாக சரத் பொன்சேகா மீதான வழக்குகளை அவதானிக்கவென அனுப்பி வைக்கப்பட்ட றொவல் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஜுன் 6, 2011 இலிருந்து ஜுன் 11, 2011 வரை இலங்கையில் தங்கியிருந்தார். பொன்சேகாவின் வழக்குரைஞர்கள் தேவையான சகலதையும் தந்ததாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறையில் பொன்சேகாவின் நிலை பற்றி குறிப்பிடும்போது, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நிலைம திருப்தியாகவே உள்ளது. ஆனால் உண்டான முன்னேற்றம் ஒவ்வொன்றும் நீதிமன்றின் கட்டளையின் பேரிலேயே உண்டானது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. றொவலின் அறிக்கைப் பற்றி அச்சமயத்தில் சட்டமா அதிபராக கடமையாற்றிய மொறான் பீரிஸ் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’