போலி மகஜன சம்பத லொத்தர்ச் சீட்டுக்கள் மூலம் பெருமளவு பணம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் 21 வயதுடைய ஒருவர் மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் கணினியையும் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கடுவெலவைச் சேர்ந்த இச்சந்தேக நபர் உண்மையான சீட்டொன்றை ஸ்கானிங் செய்து கடைசி மூன்று இலக்கங்களை மாற்றுவதன் மூலம் 1000 ரூபா பரிசுகள் பலவற்றைப் பெற்றுள்ளார். இவரிடமிருந்து ஒரே இலக்கத்தைக் கொண்ட இரண்டு லொத்தர் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இவர் போலி சீட்டுக்களை கொடுத்து வீதியோரக் கடைகளிலும் வான்களிலும் பரிசுப்பணத்தைப் பெற்றுள்ளார். இந்த மோசடியை இவர் நீண்டகாலமாக செய்துவந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’