வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஜனவரி, 2012

இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது முஸ்லிம்களுக்கான தீர்வு அவசியம்: எஸ்.எம்.கிருஷ்ணா


னப்பிரச்சினைக்கான தீர்வின் போது முஸ்லிம்களுக்கான தீர்வு அவசியம் எனஇலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் பிரதி பொது செயலாளர் நிசாம் காரியப்பர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் மற்றும் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் பங்குபற்றினர். சகல இனங்களையும் பாதிக்காத வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் இதன்போது வலியுறுத்தியதாக நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார். அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசு தனது எல்லைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்ததாக நிசாம் காரியப்பர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை அரச தரப்பினருடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது வலியுறுவதாக எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்தார் என பிரதி மேயர் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’