இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என இந்தியா நம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இந்திய வெளிவிவகார அமைசச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து தரப்பினரினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிரந்தர தீர்வு காண்பதற்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் தீவிரமாக கருத்திற்கொள்ளும் என தான் நம்புவதாகவும் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கிருஷ்ணா தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் நேற்றுமாலை கலந்துரையாடல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’