தமிழ் மக்களின் செறிவான குடிம்பரலுள்ள இடங்களில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.என்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இன்று(17) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதென வலியுறுத்திய அவர், இதனை இலங்கை அரசு விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’