வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 ஜனவரி, 2012

புகலிடக் கோரிக்கையாளர்களை கொண்டு செல்லவிருந்த படகு கைப்பற்றப்பட்டது


ம்பாந்தோட்டை கடலுக்கு அப்பால் புகலிடம் கோரும் 22 பேரை கொண்டுசெல்லவிருந்ததாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது மாலுமிகள் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கரையோர காவல் படையினர் அதிகாலை 2 மணியளவில் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். குறித்த படகின் உரிமையாளர் ஒளிந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 8 பேரின் உதவியுடன் 14 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த வேளையில் தங்காலையிலுள்ள ரேகாவ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றிலிருந்து இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களில் விடுதி உரிமையாளரும் அடங்குவதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் யாழ்ப்பாணம், உடப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் கூறினார். கைதுசெய்யப்பட்ட 14 புகலிடக் கோரிக்கையாளர்களில் 13 பேர் தமிழர்களெனவும்; அவர் கூறினார். அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மனிதக் கடத்தல் முயற்சிகளை கடற்படையினர் முறியடித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’