உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் நடைபெற்றது. கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 10 பேரையும் நினைவு கூரும் முகமாக இந் நிகழ்வு அனுஸ்டிக்;கப்பட்டது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன். தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான பேராசிரியர் சிற்றம்பலம், சி.வி.கே.சிவஞானம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், சொலமன் சிறில், சிவச்சந்திரன், தமிழ் தேசியக்கூட்டமைப்pன் நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசசபைத் தவிசாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இறந்தவர்களின் நினைவுத்தூபிகளுக்கு கலந்துகொண்ட கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்துபவர்கள் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’