வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஜனவரி, 2012

எதிர்ப்பு அரசியல் மூலம் ஒருபோதும் தீர்வுகாண முடியாது - ஈ.பி.டி.பி.யின் சர்வதேச இணைப்பாளர்


ர்வதேச நாடுகளின் அரசாங்கங்களினதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் ஆதரவு தமக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியல் ஊடாக ஒருபோதும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை இவர்களால் பெற்றுவிட முடியாது எனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச இணைப்பாளர் எம். மித்திரன் தெரிவித்தார்.
புலம் பெயர்ந்து சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் மக்களுடைய தற்போதைய நிலை தொடர்பாக தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவதைப் போன்று புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. வன்னியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பெயரால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் நிதி சேகரித்து வருகின்றனர். ஆனால் இந்த நிதி தமிழ் மக்களைச் சென்றடையவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் இருந்து வந்த ஆதரவு குறைந்துவருகிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுத் தருவதாக இவர்கள் கூறுவதில் எந்த ஒரு உண்மையும் கிடையாது. இவர்களால் இது முடியாது. இவர்கள் பின்பற்றிவரும் எதிர்ப்பு அரசியல் ஊடாக இதனைச் சாதித்துவிட முடியாது. நிரந்தரத் தீர்வு தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் கையேந்துவதை விடுத்து நடைமுறைச் சாத்தியமான வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும். ஆனால் இதனைச் செய்யாது எதிர்ப்பு அரசியல் ஊடாக இரட்டை வேடத்துடன் சர்வதேச ஆதரவு இருப்பதாகக் கூறி தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். தமிழ் மக்களின் அழிவுக்கும் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே காரணமானவர்கள். இனிவரும் காலங்களாவது நடைமுறைச் சாத்தியமான வகையில் சிந்தித்துச் செயற்பட இவர்கள் முன்வர வேண்டும். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் இந்தப் பகுதி மக்களுடன் இருந்து மக்களுடைய நலன்கள் தொடர்பாகவும் பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் தூர நோக்குடன் செயற்பட்டமையினாலேயே இந்தப் பகுதி தற்பொழுது வேகமான அபிவிருத்தியை கண்டுவருகிறது. இந்த ஜனநாயக வெற்றியை கடந்தகால தேர்தலிலும் மக்கள் நிரூபித்துள்ளனர். எனவே கூட்டமைப்பினர் தொடர்ந்தும் சர்வதேசத்தினைக் காட்டி தமிழ் மக்களை ஏமாற்றாது மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் நடைமுறைச் சாத்தியமான வகையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’