வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஜனவரி, 2012

துமிந்த கைது செய்யப்படாதிருப்பதற்கான உத்தரவை மேல் நீதிமன்றிடம் கோரலாம்: நீதவான்


கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்வதற்கான உத்தரவினால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த உத்தரவை நீக்குமாறு மேல் நீதிமன்றிடம் கோரலாம் என துமிந்தவின் சட்டத்தரணியிடம் கொழும்பு நீதிமன்றமொன்று நேற்று தெரிவித்தது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, துமிந்த சில்வாவை செய்ய வேண்டாம் என சி.ஐ.டிக்கு உத்தரவிடுமாறு துமிந்த சில்வாவின் வழக்குரைஞர் கோரினார். இதுவரை சி.ஐ.டியினால் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை துமிந்த சில்வா சுட்டதாக தெரியவரவில்லை எனவும் பாரதவை துமிந்த சுட்டதை பார்த்ததாக சாட்சிகள் எவரும் கூறவில்லை எனவும் துமிந்தவின் வழக்குரைஞர் தெரிவித்தார். இது குறித்து நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவிக்கையில் முந்தைய உத்தரவை மாற்றுவதற்கு இந்நீதவான் நீதிமன்றுக்கு அதிகாரமில்லை எனவும் இந்த உத்தரவினால் எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மேல் நீதிமன்றிடம் இத்தீர்ப்பை மாற்றக் கோரலாம் அதுவே இத்தகைய கோரிக்கைகளுக்கான முறையான வழியாகும் எனக் கூறினார். இவ்வழக்கு விசாரணை ஜனவரி 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’