தமிழரின் கலை காலாசர பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் யாழப்பாணத் திருவிழாவை ஏற்பாடு செய்த யாழ் மாநகர சபையின் முயற்சி பாராட்டத்தக்கது என வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தைப்பொங்கல் என்பது ஒரு சமய சடங்கல்ல. அதனை சமூகம் சார்ந்த சடங்காகவே கருத வேண்டும். எமது முன்னோர்கள் தைப்பொங்கலை கலை கலாசார பண்பாட்டு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளதுடன் அந்நிலை இன்று அருகி வந்தள்ளது. இந்நிலையில் யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வந்த யாழ்ப்பாணத் திருவிழா மீண்டும் தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது. அந்தவகையில் யாழ் மாநகர சபையின் முயற்சி பாராட்டுதற்குரியது என்றும் தெரிவித்தார். தேசியக் கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் பீடாதிபதி யோகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போது இங்கு தங்கி நிற்கும் மாணவர்களது தேவைக்கென கல்லூரிச் சமூகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முதற்கட்டமாக 50 படுக்கைக்குரிய மெத்தைகள் கட்சி நிதியிலிருந்து உடனடியாகப் பெற்றுத் தரப்படுமெனவும் மேலதிகமானவையும் காலக் கிரமத்தில் பெற்றுத் தரப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார். அத்துடன் இணைக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் கல்விசாரா ஊழியர்களது நியமனங்கள் என்பன தொடர்பாக கல்வியமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது நிச்சயம் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன் இருக்கின்றதைப் பாதுகாத்துக் கொண்டு அதிலிருந்து முன்னேறுவதே எமது நோக்கம். வரும் ஆனால் வராது என்பதல்ல. வராது ஆனால் வரும் என்பதே எமது அரசியலாக இருக்கின்றது என்றும் அதனூடாகவே இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார். இதன்போது திருமதி மனோன்மணி சண்முகதாஸ் ஈ.பி.டி.பி.யின் கோப்பாய் பிரதேச அமைப்பாளரும் வலி கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஐங்கரன் அப்பிரதேச இராணுவ பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’