வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஜனவரி, 2012

வெள்ளந்துறை தோட்டத்தில் தொடரும் இன மோதல்


ரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை, வெள்ளந்துறை பகுதியில் இரு இனக் குழுக்களுக்கிடையே இடையில் நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பெரும்பான்மை இன இளைஞர்கள் தமிழ் இளைஞர் ஒருவரைத் தாக்கியுள்ளனர். அதன்பின்னர் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் தாக்குதலுக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் தற்போது கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தவிர இன்னும் மூன்று தோட்ட இளைஞர்களும் காயமுற்றனர். அவர்களில் ஒருவரின் காலில் துப்பாக்கிச் சூட்டுக்காயமும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதேவேளை தமிழ் இளைஞர்களின் வியாபார ஸ்தலங்கள், இரு பஸ் வண்டிகள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கேள்வியுற்ற சப்ரகமுவ தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ரூபன் பெருமாள் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களையும் தோட்ட மக்களையும் சந்தித்துள்ளார். அதன் போது இவ்வாறான தனிப்பட்ட காரணங்களால் ஏற்படும் இன மோதல்களுக்கு தாம் தொடர்ந்து முகம் கொடுத்து வருவதாகவும், கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக இப்படியான தாக்குதலுக்கு தாம் உட்பட்டதாகவும் தோட்ட மக்கள் கவலை தெரிவித்தனர். இதனை கவனத்திற்கொண்ட அவர், தொடர்ச்சியாக இடம்பெறும் மோதல் சம்பவங்கள் குறித்து கஹவத்தை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களில் தெரிவித்ததோடு, இது தொடர்பாக இரு சாராரிடமும் விசாரணை நடத்துவதற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’