வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஜனவரி, 2012

நெடுந்தீவில் வீடுகள் கையளிப்பு! இப்பகுதி பல்வேறு அபிவிருத்திகளைக் காணுமென அமைச்சர் நம்பிக்கை!


யாழ் தீவகம் நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி அது தொடர்பில் ஆராய்ந்தறிந்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
நெடுந்தீவுக்கு இன்றைய தினம் (26) விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் மற்றும் ஆளுநர் அங்கு முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். இதன் பிரகாரம் கீழ் தீவகத்தில் கோடைக் காலத்தில் நிலவும் நீர்த் தட்டுப்பாட்டை கருத்தில்கொண்டு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வெட்டுக்களிக் குளத்தைப் பார்வையிட்ட அமைச்சர் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் அதன் சாதக பாதக நிலைவரங்கள் தொடர்பாக துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டனர். இப்புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நெடுந்தீவின் களாமுனைப் பகுதியில் சுற்றுலா மையம் அமைப்பது சாமிப்பிட்டிப் பகுதியில் சித்த மருத்துவ மூலிகையான கற்றாளை வளர்ப்புத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் அதன் திட்ட வரைபை சமர்ப்பிக்குமாறும் துறைசார்ந்தோரிடம் பணிப்புரை விடுத்தார். இதனிடையே குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு கடற்போக்குவரத்தின் போது தாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பில் படகோட்டுநர்கள் அமைச்சர் அவர்களிடம் எடுத்து விளக்கினர். இது விடயம்தொடர்பில் கடற்படை அதிகாரி ஊடாக தீர்வு காணமுடியுமென்றும் தெரிவித்ததுடன் நெடுந்தீவு தாளைத்துறைப் பகுதயை ஆழப்படுத்தித் தருமாறும் இதனூடாக தமது தொழில் இலகுவாக்கப்படலாம் என்றும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் சுட்டிக் காட்டியபோது கோரிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கினார். அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைக்கு இந்திய இலங்கை அரசுகள் மட்டுமல்ல இருதரப்பு கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடியே தீர்வு காணமுடியுமென ஜனாதிபதி தம்மிடம் தொலைபேசியில் கூறியிருந்ததையும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக் காட்டியதுடன் இப்பிரச்சினைக்கு வரும் பங்குனி மாதத்திற்குள் முடிவு காணப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் கடற்படைப் பகுதியிலுள்ள வெளிச்ச வீட்டுக் கோபுரத்திற்கு உடனடியாக மின்விளக்கைப் பொருத்துமாறு கடற்படை அதிகாரியிடம் அமைச்சர் அவர்கள் இதன்போது தெரிவித்தார். இதனிடையே நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தில் கடற்படையினரின் அனுசரணையில் இயங்கி வரும் தையல் கூடத்தை பார்வையிட்டதுடன் நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஆழமாக்கப்பட்ட பகுதியையும் புதிதாக அமைக்கப்பட்ட துறைமுகத்தையும் அமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதன்போது பிரதேச செயலர் சிறி வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ரவி விஜயகுணரட்ன நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் றெக்சியன் (ரஜீவ்) ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) உள்ளிட்ட துறைசார்ந்தோரும் உடனிருந்தனர்.










































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’