காணப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்தையும் நாட்டில் நடைமுறைப்படுத்தினால் புதிய பிரச்சினைகளே உருவாகும். எனவே ஐக்கிய தேசியக் கட்சியும் ,தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி. யும் விரைவில் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என்றும் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவையின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் உறுதியானதும் கொள்கை ரீதியிலானதுமான நிலைப்பாட்டிலேயே உள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லும் தீர்வுத் திட்டம் என்பது எல்லை மீறிய அதிகாரப் பகிர்வு அல்ல. செனற் சபை முறைமையினையே இது குறிப்பிடுகின்றது. செனற் சபை யோசனையினை இந்திய மத்திய அரசாங்கமும் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜும் ஏற்றுக் கொண்டுள்ளனர். காணி அதிகாரங்களை வழங்குவதில் சிறு சிறு பிரச்சினைகளே உள்ளன. அதனைத் தீர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால் பொலிஸ் அதிகாரம் என்பது பிரச்சினைக்குரிய விடயமாகவே உள்ளது. இதனை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடியாது. எவ்வாறாயினும் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஊடாகவே பொலிஸ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் பேசப்பட வேண்டும். இந்தியாவின் ஆட்சி முறைமைகள் இலங்கைக்கு 100 வீதம் பொருந்தாது. அதேபோன்றுதான் ஏனைய நாடுகளின் நிர்வாக முறைமைகளுமாகும். வடக்கு, கிழக்கு மக்களுக்கா அல்லது அரசியல்வாதிகளுக்கா அதிகாரங்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து தற்போது சிந்திக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் "திம்பு'' பேச்சுத் தொடக்கம் இன்றுவரை அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசப்படுகின்றதே தவிர தமிழ் மக்களின் தேவைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அரசியலமைப்பில் உள்ள விடயங்களே நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்றால் அதனை நடைமுறைப்படுத்த இயலாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதிலும் இத்தகைய நிலையே காணப்படுகிறது. எவ்வாறாயினும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கு பற்ற வேண்டும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’