வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஜனவரி, 2012

இலங்கையில் இனவாதத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை அழிக்கவே இந்தியா முயற்சி


ந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் வருகைக்கு அரசாங்கம் அனுமதியளிக்கக் கூடாது. இலங்கையில் இனவாதத்தை ஏற்படுத்தி மீண்டும் தமிழ் மக்களை அழிவிற்குள் தள்ளிவிடவே இந்தியா முயற்சிக்கின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அழிவிற்கும் பின்னடைவுகளுக்கும் இந்தியாவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புமே பொறுப்புக் கூற வேண்டும் என்று அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் பொதுச் செயலாளருமான வசந்த பண்டார கூறுகையில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சரான எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ளார். இவரின் வருகையின் பின்னணியில் இலங்கைக்கு ஆபத்தான விடயங்களே உள்ளன. வடக்கு புகையிரத பணிகளை பார்வையிடுவதற்காக என்று கிருஷ்ணா இலங்கை வந்தாலும் இந்தியாவின் நோக்கம் அதுவல்ல. நாட்டில் இனவாதப் பேச்சுக்களை ஆரம்பித்து மீண்டும் தமிழ், சிங்கள உறவை முறிப்பதே குறிக்கோளாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’