10 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த வழக்கில் 82 வயது முதியவர் குற்றவாளி என்று புனே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவி்த்துள்ளது.
புனேவில் உள்ள நாராயண் பேத் பகுதியைச் சேர்ந்தவர் மோகினிராஜ் யஷ்வந்த் குல்கர்னி(82). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி. அவரது மனைவி மிருனாலினி. உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த மிருனாலினியைக் கவனித்துக் கொள்ள ரேகா என்பவரை குல்கர்னி வேலைக்கு வைத்தார். ரேகாவுக்கும் குல்கர்னிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் குல்கர்னி ரேகாவின் 10 வயது மகள் ரோகினியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார். இந்த கொடூரம் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி குல்கர்னியின் வீட்டில் நடந்தது. அப்போது ரேகா வெளியே சென்றிருந்தார். வீட்டுக்கு வந்ததும் தனது மகள் சுயநினைவின்றி கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார். தன்னிடம் குல்கர்னி தவறாக நடப்பதாக முன்பே ரோகினி தனது தாயிடம் புகார் கூறியிருக்கிறாள். இது பற்றி கேட்ட ரேகாவிடம் சம்பளத்தை அதிகரித்துத் தருவதாகக் கூறி குல்கர்னி அவரை சமாளித்துவிட்டார். பணத்திற்கு ஆசைப்பட்டு ரேகாவும் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் தான் ரோகினி சீரழித்துக் கொல்லப்பட்டாள். நான் தான் குழந்தையைக் கெடுத்து கொன்றேன் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். ஏனென்றால் எனக்கு 79 வயதாகிறது(அப்போதைய வயது) என்று குல்கர்னி மிரட்டியுள்ளார். அப்பொழுது கூட உண்மை தெரிய வந்த ரேகா குல்கர்னி தருவதாகக் கூறிய ரூ.50,000 பணத்திற்கு ஆசைப்பட்டு போலீஸ் விசாரணையில் பொய் சொன்னார். பின்னர் அப்ரூவராக மாறி நடந்ததைக் கூறினார். இந்த வழக்கில் குல்கர்னி மற்றும் ரேகா ஆகிய 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வழக்கு புனே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி 82 வயதாகும் குல்கர்னி தான் குற்றவாளி என்பதை உறுதிபடுத்தினார். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 10 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த வழக்கில் 82 வயது முதியவர் குற்றவாளி என்று புனே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவி்த்துள்ளது. புனேவில் உள்ள நாராயண் பேத் பகுதியைச் சேர்ந்தவர் மோகினிராஜ் யஷ்வந்த் குல்கர்னி(82). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி. அவரது மனைவி மிருனாலினி. உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த மிருனாலினியைக் கவனித்துக் கொள்ள ரேகா என்பவரை குல்கர்னி வேலைக்கு வைத்தார். ரேகாவுக்கும் குல்கர்னிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் குல்கர்னி ரேகாவின் 10 வயது மகள் ரோகினியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார். இந்த கொடூரம் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி குல்கர்னியின் வீட்டில் நடந்தது. அப்போது ரேகா வெளியே சென்றிருந்தார். வீட்டுக்கு வந்ததும் தனது மகள் சுயநினைவின்றி கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார். தன்னிடம் குல்கர்னி தவறாக நடப்பதாக முன்பே ரோகினி தனது தாயிடம் புகார் கூறியிருக்கிறாள். இது பற்றி கேட்ட ரேகாவிடம் சம்பளத்தை அதிகரித்துத் தருவதாகக் கூறி குல்கர்னி அவரை சமாளித்துவிட்டார். பணத்திற்கு ஆசைப்பட்டு ரேகாவும் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் தான் ரோகினி சீரழித்துக் கொல்லப்பட்டாள். நான் தான் குழந்தையைக் கெடுத்து கொன்றேன் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். ஏனென்றால் எனக்கு 79 வயதாகிறது(அப்போதைய வயது) என்று குல்கர்னி மிரட்டியுள்ளார். அப்பொழுது கூட உண்மை தெரிய வந்த ரேகா குல்கர்னி தருவதாகக் கூறிய ரூ.50,000 பணத்திற்கு ஆசைப்பட்டு போலீஸ் விசாரணையில் பொய் சொன்னார். பின்னர் அப்ரூவராக மாறி நடந்ததைக் கூறினார். இந்த வழக்கில் குல்கர்னி மற்றும் ரேகா ஆகிய 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வழக்கு புனே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி 82 வயதாகும் குல்கர்னி தான் குற்றவாளி என்பதை உறுதிபடுத்தினார். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’