25 டிசம்பர் 2011 த சன்டே இந்தியன் சஞ்சிகையில் கவிஞர் காசிஆனந்தனால் தமிழா உனக்கு வெட்கமாக இல்லையா என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை படித்தேன். அதில் தமிழில் ஆங்கிலகலப்பினால் வரும் பாதிப்புக்கள், தமிழ் மொழி அழிவு பற்றிய கவலைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன .
மொழிக்கலப்பு தொடர்பில் தன் தாய் மொழிமீது பற்றிருப்பதும், அதைப் பாதுகாக்க வளர்க்க எண்ணுவதிலும் தவறில்லை. அண்மையில் வெளிவந்த ஆங்கிலமொழி கலந்த திரைப்படப் பாடல் வை திஸ் கொலவெறி பற்றிஅவர் குறிப்பிடுகையில் தமிழனாக இருந்துகொண்டு இப்படி எழுதுவதில் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?” இப்படி மொழிக்கலப்புபாடல்கள் எழுதுபவர்களைத் தண்டிக்கவேண்டும் எனமிக உணர்ச்சிவசப்பட்டுள்ளார் குளிர்களி, குழம்பி, மீள் முறுக்கி வெதும்பி; ,வெதுப்பகம்; என நடைமுறையில் இல்லாத பலசொற்கள் விடுதலைப்புலிகளின் காலத்தில் அறிமுகப்படுத்தபட்டனவே. கடும் தண்டனை கிடைக்கும் என்ற சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் அந்தசொற்களை நடைமுறைப்புழக்கத்திற்கு கொண்டுவரமுடியவில்லையே. சினிமாஎன்பதுபெரும்பாலும் வெகுஜனங்களால் ஒருபொழுதுபோக்காகவேகருதப்படுவது. அதற்கு மேல் வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படுவது. சமூகஅக்கறை உள்ள சினிமாக்கள் இருக்கின்றன. தவிரசினிமாவும் ஒருஊடகம். அன்றுதொட்டு இன்றுவரை சினிமாவில் மொழிக்கலப்பு இருக்கிறது. நாம்; மொழியைப் பாதுகாக்கவேண்டும், பேணவேண்டும், வளர்க்கவேண்டும் என்றால் அதற்கான விழிப்புணர்சியை ஏற்படுத்துவதில் தவறில்லை. பாடல்களில் வேறுமொழிகலப்பதால் எமதுமொழி அழிந்துவிடும் , தூய்மையற்றுப் போய்விடும் என்றபயம் அனாவசியமானது. வெகுஜனங்கள் புரிந்துகொண்டு ரசிப்பதற்காக நகைச்சுவையாக எழுதப்பட்ட ஒருசாதாரணபாடலின் மொழிக்கலப்பிற்காக இவ்வளவு தூரம் கோபப்பட்டு தண்டனைகொடுக்கவேண்டும் என்று ஆவேசப்படும் கவிஞர் ஈழத்தில தமிழர்கள் தமிழர்களாலேயே கொல்லப்படும் போதுமௌனம் சாத்தித்தது ஏன்? கடந்த 25 வருடமாக இந்தஅவலம் தொடர்நிகழ்வாக இருந்தபோதும் கவிஞர் கண்டிக்கத் தவறியதேன். தமிழ் சமூகத்திற்கும் வருங்காலச் சந்ததிக்கும் எவ்வளவுபெரிய இழப்பு. சொந்தநாட்டில் சொந்தமண்ணில் தமிழ் உறவுகள் தமிழர்களாலேயே கொல்லப்படம்போது உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையே!கோபம் வரவில்லையே!! சொந்தசகோதரர்களை, சொந்ததமிழர்களை மாறுபட்டகருத்துக்காக கொலைவெறியுடன் கொன்றுகுவித்தவர்களை நீங்கள் விருப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லையா? நிஜத் தமிழ் கொலைவெறியை கண்டும் காணாமல் இருந்துவிட்டு இப்போது சம்பந்தா சம்பந்தமில்லாத மொழி இனம் கடந்து உலகளாவிய அளவில் கோடானகோடி இளம் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடலின் மீது வெறுப்பை உமிழ்வதேன?; அதுவும் அந்தபாடலை எழுதியவருக்கு தண்டனைகொடுக்கவேண்டும் என்கிறீர்கள் . இதுஒரு ஜனநாயகவிரோதக் கோரிக்கையாக உங்களுக்குப் படவில்லையா? தமிழில் ஒருபுதுச் சொல் நுழையும் போது நம்மிடையே உள்ளபழஞ்சொல் வழிக்கொழிந்துவிடும் இது நமக்கு இழப்புஎன்று வருந்துகிறீர்கள். தமிழ்சொல் இழப்பிற்குமனங்குமுறும் நீங்கள் தமிழை நேசித்தமக்களை நேசித்த ஆயிரமாயிரம் உயிர்கள ்தமிழ்தேசியத்தின் பேரால் கொல்லப்பட்டதற்கு வருந்தியதாகத் தெரியவில்லை. மொழிப்பற்று என்பதற்காக மனச்சாட்சியைக் கொன்று மனித் நேயம் இல்லாததமிழனாகவாழ்வதா? ஈழத்தில் இதுவரையில் 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப்போய் வாழ்ந்துவருகிறார்கள. அவர்கள் அங்குபோனபின்னர் தான் அந்தழொழிகளைக் கற்றுக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஈழத்தில் இருந்து வெளிநாடு சென்ற எம தமிழர்கள் தாங்கள் இருக்கும் நாட்டுமொழியுடன் எம் மொழியையும் கலந்துதான் பேசுகிறார்கள். லண்டன் ,கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழுடன் ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறார்கள். தமிழை நேசித்த ஈழத்தமிழரும் இன்று ஆங்கிலம் பேசுவதையும் ஆங்கிலம் கலந்ததமிழ்பேசுவதையும் தான் பெருமையாகஎண்ணுகிறார்கள் ஆங்கிலமொழிமோகத்தில், அவசியமில்லாத இடத்தில் ஆங்கிலம் பேசுவதும் ஆங்கிலம் கலந்ததமிழ் பேசுவதும் போலித்தனமானது. அதை தவிர்ப்பதற்கு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பலவழிகள் உண்டு அதனை முயற்சிக்கவேண்டும் .ஊக்கப்படுத்தவேண்டும். ஒருவரைஒருவர் புரிந்துகொள்வதற்குதொழில் செய்வதற்குமொழிக்கலப்புஅவசியமாகிறது. அதுஅவரவர் வாழும் சூழ்நிலையைப் பொறுத்து மொழிகலந்து பேசவேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற பல இனமொழிபேசும் மக்கள் வாழும் நாட்டில் அது தவிர்க்கமுடியாததும் கூட. நடுத்தரமக்கள் தான் ஆங்கிலம் கலந்துபேசுகிறார்கள் என்று நீங்கள் எழுதியதில் தவறுண்டு. ஒருசாதாரணவியாபாரி,ஆட்டோஓட்டுனர், சாதாரணதொழிலாளர்கள்; மத்தியில் கூட பேச்சுவழக்கில் ஆங்கிலமொழிகலப்பு இருக்கத்தான் செய்கின்றது. இன்று ஈழத்தைப் பொறுத்தவரை இனப்பற்று மொழிப்பற்று என்றுசொல்லிக் கொண்டு கொலைவெறி கொண்ட நிஜக்கொலைகளைஆதரித்தவர்களின் தவறானசெயற்பாடுகளும் தமிழர்களின் அவலநிலைக்குகாரணமாகும் அவர்கள் தொடர்ந்து அல்லல் படுவதற்கும் மொழிவெறியும் கொலைவெறியும் கூட காரணமாக அமைந்தன. இந்தகட்டுரையில் மொழிகலப்பால் வரும் பாதிப்பை எடுத்தியம்பிய கவிஞர்தமிழ்மொழி -தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு காரணங்களை பாரபட்சமில்லாமல் கண்டறியமுயல்வாராயின் அதுவே நல்லதமிழ் பணியாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’