இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மட்டுமல்ல அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வந்தாலும் இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கு இடமில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்க விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
அரசுகுக்குள் 60 வீதமானோர் சூழச்சிக்காரர்களே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று இடம்பெற்றபோதே கலாநிதி குணதாஸ அமரசேகர மேற்கண்டவாறு கூறினார். அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் பாரிய சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் உள் வீட்டுச் சதியாகும். அரசியல் தீர்விற்கு அதிகாரப் பகிர்வை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பில் இருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். நாட்டில் இனவாதம் உள்ளது என்பது போலியான மாயையாகும். எனவே தேவையற்ற விடயங்களை பேசுவதில் பயனில்லை. இன்று நாட்டை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல சக்திகள் செயற்படுகின்றன. 13 ஆவது திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி சர்வேதச நாடுகள் அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளன என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’