வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஜனவரி, 2012

புலிகளின் முன்னாள் போராளிகள் பொலிஸ் சேவையில் இணையும் வாய்ப்பு


மிழீழ விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தேவையான கல்வி மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்டிருந்தால் அவர்கள் இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் சுமார் 11,000 போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களில் சுமார் 10,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இப்போராளிகள் விரும்பினால் அவர்கள் பொலிஸஸில் இணைந்துகொள்ளலாம் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். "பொலிஸ் திணைக்களம், அவர்களுக்கான வாய்ப்பை திறந்துள்ளது. இது சமூகத்தில் இணைந்த மேற்படி அங்கத்தவர்களுக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் இடையிலான விடயம். நாம் புனர்வாழ்வளிக்கும் துறையினர் என்ற வகையில் நாம் இதில் சம்பந்தப்படவில்லை" என அவர்கூறினார். சுமார் 1000 முன்னாள் போராளிகளுக்கு தற்போது பல்வேறு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹனவிடம் கருத்து கேட்டபோது, புனர்வாழ்வளிக்கப்பட் போராளிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு உள்ளதை உறுதிப்படுத்தினார். "அவர்கள் இப்போது சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நாம் பாரபட்சம் காட்டமுடியாது. அவர்களுக்கு போதிய கல்வித் தகுதியிருந்தால் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாதிருந்தால் பொலிஸ் சேவையில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம்"எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். எனினும், இதுவரை புலிகளின் முன்னாள் போராளிகள் எவரும் பொலிஸ் சேவையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’