வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 ஜனவரி, 2012

மஹிந்த சிந்தனை இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கும்: அஜித் கப்ரால்


ஹிந்த சிந்தனை அடுத்த சில வருடங்களில் இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ளல் மற்றும் அனைத்து மக்களும் சம அளவிலான அபிருத்திகளை மேற்கொள்ளல் ஆகியனவே மேற்படி இரண்டு சவால்களாகும் என அவர் குறிப்பிட்டார். சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தினால் நல்லிணக்கத்திற்கான தேசிய மாநாடு (பகுதி – 2) நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் "நல்லிணக்கத்தில் வர்த்தக சமூகத்தில் பங்கு" எனும் தொனிப்பொருளில் சிறப்புரையாற்றும் போதே அஜித் நிவாட் கப்ரால் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், இலங்கையை அபிவிருத்தி செய்தவதற்கு வர்த்தக சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. இதற்காக அரசாங்கம் தயார உள்ளது. இதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச மற்றும் தனியார் வங்கிகள் திறக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இக்கடன்கள் மூலம் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பலர் சுயதொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடன் திட்டங்களை கண்கானிப்பதற்காக பிரிவொன்று மத்திய வங்கியினால் உருவாக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவித்தி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற யுத்ததிற்காக இலங்கை அரசாங்கம் சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டொலரையே செலவளித்துள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தில் 4 சதவீதமேயாகும். ஏனைய பல நாடுகள் இதனை விட அதிக பணத்தையே செலவளித்துள்ளது. இதேவேளை, குறித்த கால பகுதியில் ஈராகில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைக்கு அமெரிக்கா 683 பில்லியன் அமெரிக்க டொலரையும் பயிற்சி நடவடிக்கைக்காக 23.2 பில்லியன் அமெரிக்க டொலரையும் செலவளித்துள்ளது. இதேபோன்று ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைக்கு அமெரிக்கா 227 பில்லியன் அமெரிக்க டொலரையும் பயிற்சி நடவடிக்கைக்காக 15.8 பில்லியன் அமெரிக்க டொலரையும் செலவளித்துள்ளது. குறித்த கால பகுதியில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைக்கு அமெரிக்கா செலவளித்த நிதியில் 14 சதவீதத்தையே இலங்கை செலவளித்துள்ளது என்றார். இங்கு உரையாற்றிய பேராசிரியர் ரோஹான் குணரட்ன, நல்லிணக்கத்தை ஒரு சமூக பொறுப்புடமையாக வர்த்தக நிறுவனங்கள் கருத வேண்டும். இதன் மூலம் வர்த்த நிறுவனங்கள் சமூகத்திற்கு பல சேவைகளை வழங்க முடியும். வட மாகாண அபிவிருத்திக்காக அரசாங்கத்துடன் வர்த்த நிறுவனங்களும் இணைந்து செயற்படுகின்றன. 53 முன்னாள் போரளி ஜோடிகளுக்கான திருமண வைபவம் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இவர்களுக்கான தாலி கொடி மற்றும் திருமண ஏற்பாடுகளை ஈஸ்வரன் எனும் ஒரு வர்த்தகரே மேற்கொண்டார். இதனையடுத்து குறித்த குடும்பத்தினர் இன்று சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போன்று ஏனைய வர்த்தக நிறுவனங்களும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவ வேண்டும். யுத்த காலத்தில் விடுதலை புலிகள் அரசியல் தலைவர்கள் படை அதிகாரிகள் மற்றும் வர்த்த நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதே தாக்குதல் நடத்தினர். இதில் முதலாவது இடம்பெற்ற தாக்குதல் 1986ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி எலிபன்ட ஹவுஸ் மீது மேற்கொள்ளப்பட்டதாகும். இதனை தொடர்ந்து உலக வர்த்தக மையயம், மத்திய வங்கி, கட்டுநாயக்க சர்வதேச விமதான நிலையம் உள்ளிட்ட பலவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். வர்த்த நிறுவனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டால் இலங்கை அரசை பாரியளவில் பின்னடைய செய்யலாம் என்பதனாலே வர்த்த நிறுவனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாக விடுதலை புலிகளின் முக்கிய தளபதி பொட்டு அம்மான் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக போராடியது. ஆனால் விடுதலை புலிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வர்த்த நிறுவனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அரசாங்கத்தை அச்சுறுத்தினர் என குறிப்பிட்டார். இங்கு உரையாற்றி யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார், யாழ். மாவட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சுழல் தற்போது காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் யாழ். மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கை ஈடுபடுவதற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். யாழ். மாவட்டத்திலுள்ள கண்ணிவெடியினை அகற்றுவதற்கு 10 வருடங்கள் தேவை என இராணுவத்தினர் மற்றும் கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால், சுமார் இரண்டு வருடங்களுக்குள்ளேளே கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை யாழ். மாவட்டத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து யாழ். மாவட்டத்தில் காணப்பட்ட அனைத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் அகற்றப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டவுடன் மக்கள் மீள்குடிறேறப்படுகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகின்றோம். அடிப்படை வசதியின்றி மக்களை குடியேற்ற யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி அனுமதிக்கமாட்டார். யாழ். மாவட்டத்தின் சனத்தொகை தற்போது அதிகரித்து வருகின்றது. இதற்கு பிரதான காரணம் என்னவென்றால் வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதேயாகும். யாழ். மாவட்ட செயலகம் மத்திய அரசாங்கத்துடன் மாகாண சபையுடனும் இணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. 2011 தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையான கால பகுதியில் யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 251, 583 மில்லியன் ரூபா நிதியினை பொருளாதார அபிவித்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது. புகையிரத பாதை அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு திட்டங்களுக்கு மேலதிகமாகவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’