வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 ஜனவரி, 2012

போலி கடனட்டை மோசடி குற்றச்சாட்டில் இலங்கை இளைஞர் சென்னையில் கைது

லங்கை இளைஞர் ஒருவரை போலி கடனட்டை மோசடி விவகாரம் காரணமாக இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் புழல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதான நந்தீபன் எனும் இளைஞர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்தும் இவரின் சகாவான வினோத்திடமிருந்தும் (26) 70 போலி கடன் அட்டைகள், 200 வங்கி அட்டைகள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்விருவரும் வேளச்சேரி மற்றும் கிழக்கு கடற்சரைச்சாலை ஆகிய இடங்களிலுள்ள தன்னியக்க பணப்பரிமாற்ற நிலையங்களிலிருந்து 1.16 லட்சம் இந்திய ரூபாவை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நந்தீபன், வினோத் ஆகியோரிடம் நடத்திய விசாரணைகளின்போது தாம் போலி கடனட்டை தயாரிக்கும் முறையை மலேஷியாவில் வசிக்கும் மற்றொரு இலங்கையரான குமார் மூலம் அறிந்ததாக கூறியுள்ளனர். குமாரின் வழிகாட்டலின் பேரில் அவர்கள் பணப்பரிமாற்ற இயந்திரத்திலிருந்து பணம் பெற்றுள்ளனர். கடந்த டிசெம்பர் மாதம் இரண்டாவது தடவையாக சென்னைக்கு வந்த நந்தீபன் அங்கு குமாரை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வசிக்கும் தனது மனைவி, மகனை சந்திப்பதற்காக நந்தீபன் கடந்த 12 ஆம் திகதி இலங்கை;கு திரும்பவிருந்தார். எனினும் மேலும் சில லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்வதற்காக அவரை இந்தியாவில் இருக்கும்படி குமார் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்பின் வேளச்சேரி பாபி நகரில் வங்கியொன்றின் பணப்பரிமாற்ற இயந்திரத்திலிருந்து பணம் பெறும்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தான் பிரான்ஸுக்கு செல்வதற்கும் பின்னர் குடும்பத்தினரை அழைப்பதற்கும் திட்டமிட்டிருந்ததாக பொலிஸாரிடம் நந்தீபன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின்போது குண்டுவெடிப்பில் சிக்கி, சிறுநீரகமொன்றையும் ஏனைய சில உடல் அங்கங்களையும் இழந்ததாகவும் ஒருவருட காலத்திற்கு மேல் வைத்தியசாலையில் இருந்ததாகவும் பொலிஸாரிடம் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’